search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனா வெற்றி விழா"

    கனா படத்தின் வெற்றி விழாவில், ஓடாத படங்களுக்கு சிலர் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என்று தான் கூறிய கருத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh #Kanaa
    சிவகார்த்திகேயன் தயாரித்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்பட பலர் நடிப்பில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியாகி வரவேற்பை பெற்ற கனா படத்தின் வெற்றி விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு பேசும்போது, ‘‘கனா படத்தின் வெற்றிதான் உண்மையான வெற்றி. சிலர் ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்’’ என்றார். 

    அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயன் மேடை அருகில் சென்று பேச்சை முடித்துவிட்டு கொஞ்சம் கீழே வந்துவிடுங்கள் என்றார். 



    தொடர்ந்து சத்யராஜ் பேசும்போது ‘‘ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதை நான் ஆமோதிக்கவில்லை’’ என்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் கிளம்பின. இதைத்தொடர்ந்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது:–


    ‘‘கனா வெற்றி விழாவில் நான் விளையாட்டாகத்தான் அப்படி பேசினேன். எந்த படத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. யாரையும் நான் காயப்படுத்தியது இல்லை. எல்லா படங்களும் வெற்றியடைய வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன். படம் எடுத்து வெற்றியடைய செய்வது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தெரியும். நான் பேசியது யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.’’

    இவ்வாறு கூறியுள்ளார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh #Kanaa

    கனா படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா மட்டும் கொண்டாடுவார்கள். இது உண்மையான வெற்றி விழா என்று கூறினார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh
    ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்து வெளியான கனா படம் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கிறது. படத்தின் வெற்றிச் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கிரிக்கெட் தெரியாத என்னை இந்த படத்திற்காக பயிற்சி கொடுத்து நடிக்க வைத்த இயக்குனர் அருண்ராஜாவுக்கும், என்மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி.

    இந்த படத்தில் நடித்ததில் என் அம்மாவுக்கு பெரிய மகிழ்ச்சி. படத்தை பார்த்த பிறகு இந்த படத்துக்கு பிறகு நான் நடிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை என்றார். இதுதான் உண்மையான வெற்றி. நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடுவார்கள். இந்த விழா அப்படி இல்லை. இது உண்மையான வெற்றி விழா’. இவ்வாறு அவர் கூறினார்.



    சிவகார்த்திகேயன் பேசும்போது ‘என்னை நடிகர் என்றே கூப்பிடுங்கள். அதுதான் நிரந்தரம். அதில் இருந்து தொடங்கியதுதான் மற்றது எல்லாம். இந்த படத்தின் வெற்றி மூலம் கிடைத்த லாபம் எங்களுக்கு மட்டும் அல்ல விவசாயிகளுக்கும் சென்று சேரும். அவர்கள் வலியை பேசிய படம் அவர்கள் வாழ்க்கையையும் மாற்ற நிச்சயம் உதவும்’ என்று கூறினார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh #Kanaa #Sivakarthikeyan

    ×